News November 14, 2024

இந்த வாரம் OTT ரிலீஸ்

image

நடிகை நயன்தாரா – நடிகர் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நவ.18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. காளிதாஸ் வெங்கட்டின் அதர்ம கதைகள் (நவ.15) ஆஹா OTT தளத்திலும், ஆசிஃப் அலி, அபர்ணா முரளி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘கிஷ்கிந்தா காண்டம்’ (நவ.19) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகிறது. இது தவிர தோனிமா, ஒரு தவறு செய்தால் படங்கள் சிம்பிளி சௌத் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

Similar News

News March 10, 2026

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்: சு.சுவாமி

image

தொடர்ந்து 3-வது முறையாக PM நாற்காலியில் அமர்ந்துள்ள மோடி, USA அதிபர் டிரம்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என BJP மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எனக்கு தெரிந்த தகவல்களை தற்போது வரை நான் வெளியிடவில்லை; அப்படி தான் வெளியிட்டால் PM மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய அவை வழிவகுக்கும் என எச்சரிக்கும் தொனியில் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 10, 2026

போர் காலத்தில் இவற்றை செய்தால் தப்பிக்கலாம்

image

இஸ்ரேல், USA தொடங்கிய போரால் தற்போது மேற்காசிய நாடுகள் பற்றி எரிகின்றன. இந்நிலையில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தால் எப்படி அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில டிப்ஸ் அளித்துள்ளனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இது வெறும் தகவலுக்காக மட்டுமே. போர் வரப்போகிறதா என பதற்றமடைய வேண்டாம் மக்களே. SHARE.

News March 10, 2026

கச்சா எண்ணெய் விலை சரிந்தது.. இன்ப அதிர்ச்சி!

image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $10(₹918) குறைந்துள்ளது. இதனால், 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் விலை தற்போது $85- $90 என்ற அளவில் குறைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் பேசிய நிலையில், இந்த விலை சரிவு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு நீங்குவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அபாயம் சற்று தணிந்துள்ளது.

error: Content is protected !!