News November 14, 2024
34 நாட்களில் 48 லட்சம் திருமணம்! வேற எங்கே..!

இந்தியாவில் அடுத்த 34 நாட்களில் 48 லட்சம் திருமணங்கள் நடக்கப் போவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2K கிட்ஸ் தலைமுறையினர் சீக்கிரம் திருமணம் செய்வதில் வேகம் காட்டி வருகின்றனர். 90S கிட்ஸ்களை போல அல்லாமல், வேலைக்கு சேர்ந்ததுமே திருமணம் என்பதில் இவர்கள் தெளிவாக உள்ளனர். இதன் காரணமாக, இந்தியாவில் ஜெட் வேகத்தில் திருமணங்கள் நடக்கின்றன. இதை படித்து முடிக்கும் நேரத்தில் 20 திருமணங்கள் நடந்திருக்கும்.
Similar News
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகளையொட்டி மதுரை, தோவாளை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் பூக்கள் விலை விண்ணைத் தொட்டுள்ளன. மதுரை சந்தையில் கடந்த சில நாள்களாக ₹600-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ₹2,000 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பிச்சிப்பூ ₹1,200, முல்லை ₹1,000, செண்டுமல்லி ₹130, வாடாமல்லி ₹250-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் பூக்கள் விலை என்ன?
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லிட்டீங்களா ?

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் நண்பர்களுக்கு வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.
➤ அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி, சுபிட்சம் பெருகி, வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
➤ கேட்டதை கொடுக்கும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால் நலமும் வளமும் பெற்று வாழ நல்வாழ்த்துகள்.
➤ தடைகளை தகர்க்கும் விநாயகரை கொண்டாடும் சொந்தங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
News August 26, 2025
ஆடை இல்லாமல் 11 நாள்கள் சுற்றுலா

உலகின் நீளமான நிர்வாண படகு சுற்றுலா அமெரிக்காவின் மியாமியில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப். 9- 20 வரை செல்லும் இந்த சுற்றுலாவின் சிறப்பே ஆணும் பெண்ணும் ஆடைக்கு லீவு கொடுப்பதுதான். உடலை அப்படியே ஏற்று கொள்ளும் உணர்வை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாம். பயணக் கட்டணம் ஒருவருக்கு ₹43 லட்சம். 1990 முதல் Bare Necessities உள்ளாடை நிறுவனம் இதனை செய்து செய்கிறது.