News November 14, 2024

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

image

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Similar News

News March 3, 2026

ஈரானுக்கு ஆதரவு கையை நீட்டிய சீனா

image

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு உள்ள நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் குறித்து சீனா வாய் திறக்காதது சர்வதேச கவனம் பெற்றது. இந்நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. போர் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 3, 2026

பாஜக மிரட்டலால் கூட்டணியில் இணைந்த கட்சிகள்: உதயநிதி

image

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய <<19273321>>மோடி <<>>தன்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பயப்பட வேண்டாம் என தங்களிடம் சொல்வதை விட, உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடம் சொல்வதே சரியாக இருக்கும் என உதயநிதி பதில் அளித்துள்ளார். பாஜகதான் பல கட்சிகளை மிரட்டி அவர்களுடன் இணைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!