News November 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2024 அன்று மாலை 4:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 2, 2026

பெரம்பலூர்: தெரு நாய் கடித்து மான் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எழுமூர் கிராமப் பகுதிக்குள் பெண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. இந்த மானை அப்பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலை அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து மானை முருக்கன்குடி காப்பு காட்டில் புதைத்தனர்.

News March 1, 2026

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

பெரம்பலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!