News November 14, 2024
வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா?

வாக்காளர் அடையாள அட்டையில் சிலருக்கு முகவரி உள்ளிட்ட சில தகவல் மாறியிருக்கும். இதை எப்படி திருத்துவது என தெரியாமல் இருப்பர். இதற்காக EC சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 16, 17, 23, 24ஆம் தேதிகளில் உங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாமுக்கு சென்று புகைப்படம், முகவரி சான்று நகல் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பித்தால் உடனே திருத்தம் செய்யப்படும். SHARE IT
Similar News
News August 26, 2025
Beauty Tips: ₹3000 கிரீம் வேணாம்.. ₹10 படிகாரம் போதும்

அழகுக்காக தாத்தா காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் படிகாரம். இதில் உள்ள ஆண்டி-ஏஜெண்ட்கள் முகப்பரு, Open Pores, எண்ணெய் வடிதல் பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யுமாம் ▶முதலில் படிகாரத்தை பொடியாக அரைத்து, ரோஸ் வாட்டர் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள் ▶இதனை முதலில் உங்கள் கையில் தடவி அலர்ஜி ஆகிறதா என சோதித்துப்பாருங்கள் ▶பிறகு முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். SHARE.
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகளையொட்டி மதுரை, தோவாளை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் பூக்கள் விலை விண்ணைத் தொட்டுள்ளன. மதுரை சந்தையில் கடந்த சில நாள்களாக ₹600-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ₹2,000 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பிச்சிப்பூ ₹1,200, முல்லை ₹1,000, செண்டுமல்லி ₹130, வாடாமல்லி ₹250-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் பூக்கள் விலை என்ன?
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லிட்டீங்களா ?

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் நண்பர்களுக்கு வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.
➤ அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி, சுபிட்சம் பெருகி, வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
➤ கேட்டதை கொடுக்கும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால் நலமும் வளமும் பெற்று வாழ நல்வாழ்த்துகள்.
➤ தடைகளை தகர்க்கும் விநாயகரை கொண்டாடும் சொந்தங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.