News November 14, 2024
விஜய் களமிறங்கும் தொகுதி..! அனல் பறக்குதே

தவெக மாநாட்டை அடுத்து விஜய்யின் அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட ஏதுவான தொகுதி எது என ஆய்வு செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டது. அதன்படி, நிர்வாகிகள் அளித்த பட்டியலில் நாகப்பட்டினம் தொகுதி முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் தூத்துக்குடி, அரியலூர் தொகுதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 5, 2026
மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.
News March 5, 2026
அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
News March 5, 2026
EPS இதனால்தான் பதற்றத்தில் இருக்கிறார்: மாணிக்கம் தாகூர்

நிதிஷ்குமார் நிலைமை மூலம் NDA-ல் உள்ள கூட்டணிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியது பற்றி குறிப்பிட்ட அவர், பாஜக கூட்டணிகளில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல, அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். அதனால்தான், EPS போன்ற தலைவர்கள் சிறிது பதற்றமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


