News November 14, 2024

உதயநிதி வழக்கு.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

image

திமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து கொண்டு, உதயநிதி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த புதிய மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருப்பதால், புதிய மனுக்களை வாபஸ் பெற கோர்ட் உத்தரவிட்டது. மேலும், முந்தைய வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர விண்ணப்பிக்கலாம் எனவும் அனுமதித்துள்ளது.

Similar News

News March 8, 2026

பிரிட்டனின் உதவி தேவையில்லை: டிரம்ப்

image

ஈரானுடனான போரில் பிரிட்டனின் ஆதரவு இல்லாததை எப்போது நினைவு கொள்வேன் என டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர், ஒரு காலத்தில் சிறந்த நட்பு நாடான இங்கிலாந்து, இறுதியாக தற்போது 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது; ஆனால் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஈரான் போரில், தற்போது கூட்டு சேரும் நபர்கள் தங்களுக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 8, மாசி 24 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News March 8, 2026

இரண்டு நாளில் கூட்டணி உறுதியாகும்: வீரபாண்டியன்

image

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – சிபிஐ இடையிலான 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், மார்ச் 8,9-ம் தேதிக்குள் தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்படும் என்றார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை என்றும், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!