News November 14, 2024
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை மூலதன கடன்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், நிறுவனத்தின் கட்டடங்கள் கட்டுதல் போன்றவற்றுக்கு கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடனுதவி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04343 235567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.22) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
கிருஷ்ணகிரி மக்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பாக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவச இரண்டு சக்கர வாகன பழுது நீக்க பயிற்சி அளிக்க உள்ளது. 18-45 வயது வரை உள்ள இளைஞர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். பயிற்சி முடிந்த பின்பு அரசு சான்றிதழும், தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் உதவியும் செய்து தரப்படும். மேலும் 9442247921 தொடர்பு கொள்ளவும். ஷேர் IT
News August 21, 2025
கிருஷ்ணகிரி காவல்துறை இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது