News November 14, 2024

டெக். பொருளாதாரத்தில் இந்தியா முன்னணி வகிக்கும்!

image

2028-க்குள் இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக உயருமென ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ServiceNow வெளியிட்ட ஆய்வறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதான காரணியாக கருதப்படும் உற்பத்தி, கல்வித்துறைகளில் உருவாக்கத்துக்கு வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும். உலகளாவிய TECH பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

சீட் பேரத்துடன் அதிமுகவில் இணைகிறாரா காளியம்மாள்?

image

நாதகவிலிருந்து விலகிய காளியம்மாள், இன்று அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும், 2026 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சீட் வழங்காவிட்டால், தேர்தலில் அதிமுக வெல்லும்பட்சத்தில் அவருக்கு ஏதாவது வாரியத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

News March 13, 2026

Gas charge ₹30.. அலறவிடும் சென்னை ஹோட்டல்ஸ்

image

வணிக சிலிண்டர் விலை உயர்வு & தட்டுப்பாட்டால் பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்களில் மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ‘Gas Charge’ என்று தனியாக ₹9.50 பில்லில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலும் சில ஹோட்டல்களில் ₹30 கேஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில உணவகங்களில் ₹5 – ₹10 வரை உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

News March 13, 2026

பஸ் சேவைகள், ரயில் உணவுகளில் தட்டுப்பாடா?

image

பெட்ரோல், டீசல் & கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அரசு பஸ் சேவைகளில் பாதிப்பு, ரயில்களில் உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், இவை வதந்தியே என்று TNSTC & IRCTC விளக்கம் அளித்துள்ளன. போதிய டீசல் இருப்பு உள்ளதால் பேருந்து சேவைகளில் பாதிப்பில்லை என்று TNSTC தெரிவித்துள்ளது. அதேபோல், வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களிலும் உணவு தடையின்றி வழங்கப்படுவதாக IRCTC கூறியுள்ளது.

error: Content is protected !!