News March 20, 2024
இளையராஜா ஒரு வாழும் அதிசயம்

இளையராஜா ஒரு நினைவுச் சின்னம். அவரது மூச்சு பேச்சு எல்லாமே இசைதான் என இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இளையராஜாவை நான் அதிசயமாகவே இன்று வரை பார்த்து வருகிறேன். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அவரை உலகம் மறக்காது. யார் ராஜாவாக இருந்தாலும் தோற்று விடுவார்கள். ஆனால், இவன் ஜெயிக்க மட்டுமே பிறந்தவன். இந்திய அரசு ராஜாவுக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்றார்.
Similar News
News November 10, 2025
BREAKING: கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அந்நிய செலாவணி கையிருப்பு 61 லட்சம் கோடியாக சரிந்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இந்தியா மீதான வரிவிதிப்பு, உலக நாடுகளிடையே போர் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து(₹88.67) வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைவது, இறக்குமதி, ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம், இதனால் நாட்டின் வர்த்தக சமநிலையும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
News November 10, 2025
மூக்கடைப்பு இருக்கா? இதை செய்தாலே சரியாகும்!

குளிர்காலம் வந்துவிட்டால் போதும் சளி, இருமலை போலவே மூக்கடைப்பு பிரச்னைகளும் ஏற்படும். வீட்டிலேயே இதனை சரி செய்யலாம். ➤திக்கான காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள் ➤அதை மடித்து, சூடான நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும் ➤மிதமான சூட்டில் இருக்கும்போது மூக்கின் மேல் வைத்து ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்யும் போது மூக்கை சுற்றி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மூக்கடைப்பு நீங்கும். அனைவருக்கும் SHARE IT.
News November 10, 2025
இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு (கேரளா, ஆந்திரா , கர்நாடகா, புதுச்சேரி) இன்று முதல் பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


