News November 14, 2024

மீண்டும் டீக்கடைக்காரரை முன்னிறுத்தும் பாஜக

image

அரசியலில் வெற்றி பெற மிக முக்கியமானது மக்களிடம் நன்கு பரிச்சயமாகி இருப்பது. ஆண்ட்ராய்டு யுகத்தில் பலரும் மக்களிடம் பெரிய அறிமுகத்தை பெறுகிறார்கள். அப்படி பிரபலமான Influencer ஒருவர் தான் டோலி சாய்வாலா. இவர் டீக்கடை வைத்து பலரையும் கவர்ந்திருக்கிறார். மகாராஷ்டிரா பாஜகவில் அவர் இணைந்ததும் பாஜக அவரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியுள்ளது பாஜக. மக்களிடம் எளிதில் சென்று சேருவது தானே அரசியல்…

Similar News

News August 26, 2025

திமுக அமைச்சருக்கு என்னாச்சு? ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை

image

உடல் நலக்குறைவால் <<17522156>>அமைச்சர் ஐ.பெரியசாமி<<>>, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு டாக்டர்கள் குழு, சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News August 26, 2025

தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையே போச்சு: திவாரி

image

தன்னை தோனிக்கு பிடிக்காததால் தான், தனது கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்ததாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். தோனி அவருக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பளித்ததாகவும், தன்னை புறக்கணித்ததற்கான காரணம் இதுவரை தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 12 ODI போட்டிகளில் விளையாடியுள்ள திவாரி 1 சதம், 1 அரைசதம் என 287 ரன்களை எடுத்துள்ளார்.

News August 26, 2025

மாணவர்களுக்கு தினமும் முருங்கை இலை பொடி தாங்க!

image

பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். வயிறு நிறைய சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தா மாணவர்களுக்கு படிப்பு நல்லா வரும் எனக் கூறிய அவர், மாணவர்களுக்கான உணவில் தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடியை சேர்க்க வேண்டுமெனவும் இதன் மூலம் ரத்த சோகையை தடுக்க முடியும் எனவும் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!