News March 20, 2024
சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி

அதிமுகவுடன் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டுக்கு பிறகு பேசிய அவர், “அதிமுக-தேமுதிக கூட்டணி மிகவும் ராசியான அணி. 2011க்கு பிறகு மீண்டும் அது பூத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி என்பது தேர்தலுக்கு பிறகு அனைவரும் அறிவார்கள். தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என்றார்.
Similar News
News November 2, 2025
தமிழர்கள் உரிமை பறிபோகும்: வேல்முருகன்

தமிழ்நாட்டில் இருக்கும் பிற மாநிலத்தவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சென்று வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டப்பேரவை மற்றும் MP-க்களை தமிழ் மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், SIR அடிப்படையில் இங்குள்ள பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால், தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
News November 2, 2025
வீட்டில் பாசிடிவ் எனர்ஜி வேணுமா? இந்த செடி வளருங்க

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க சில வாஸ்து செடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடிகள் அமைதி, நல்வாழ்வு மற்றும் செழிப்பை வழங்குகின்றன. அவை எந்தெந்த செடிகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், வேறு ஏதேனும் செடி உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News November 2, 2025
நாளை முதல் Gpay, phonepe-வில் தாமதம் இருக்காது!

Gpay, phonepe உள்ளிட்ட UPI சேவையில் வெற்றிகரமான & தோல்வி / ரத்தான பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஒரே செட்டில்மெண்ட் சுழற்சியில் கையாள்வதை நாளை முதல் (நவ.3) NPCI நிறுத்தியுள்ளது. மாறாக இருவித பரிவர்த்தனைகளும் தனித்தனி சுழற்சிகளில் கையாளப்படும். இதனால், உங்களின் தினசரி UPI பணப் பரிவர்த்தனை வேகமாகும். தோல்வியடைந்த டிரான்சாக்ஷனுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் இனி தாமதம் ஏற்படாது. SHARE IT


