News March 20, 2024
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொலைதூர, இணையவழி தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தொலைதூர மற்றும் இணையவழியில் ஏராளமான மாணவர்கள் அண்ணாமலை பல்கலை.,யில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் எழுதிய தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News October 24, 2025
”திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு..”

தன்னை அவமரியாதையாக நடத்தினாலோ, கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர மறுத்தாலோ திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுப்பேன் என தவாக வேல்முருகன் கூறியுள்ளார். 2021 தேர்தல் முடிந்ததில் இருந்தே திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் வைக்கும் கோரிக்கைகளை திமுக ஏற்குமா, கூட்டணியில் தவாக நீடிக்குமா என மீண்டும் சலசலப்பு கிளம்பியுள்ளது.
News October 24, 2025
நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்தா? PHOTOS

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம். இதற்கு பதிலாக மென்ஸ்ட்ருவல் கப், காட்டன் நாப்கின் போன்ற மாற்றுகளை பயன்படுத்தலாம். இதை SHARE பண்ணலாமே!
News October 24, 2025
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு

RTE-ன் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்.30 & 31 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக 81,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அக்.30-ல், விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும். அக்.31-ல், விண்ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், குலுக்கல் முறையில் (Random Selection) மாணவர் தேர்வு & சேர்க்கை நடத்தப்படவுள்ளது.


