News November 14, 2024

நாமக்கல்: நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவ.21ஆம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள 04286 266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

நாமக்கல்லில் கல்வி கடன் முகாம்

image

நாமக்கல் கோட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் வழங்குவதற்கான முகாம் மாரப்பநாயக்கன்பட்டி கிராமம், சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் வருகிற செப்.20ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 11, 2025

நாமக்கல்லில் இனி இது கட்டாயம்!

image

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

News September 11, 2025

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

image

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால், அவற்றை பிடிப்பதற்காக மாநகராட்சி சார்பில் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிலர் பணியாளர்களை நாய்களை பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து, நாய்களை பிடிப்பவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!