News March 20, 2024

மீடியா முன்னாடி மூச்சு விடக்கூட பயமாக இருக்கு

image

தேர்தல் நேரமாக இருப்பதால், மீடியா முன்னாடி மூச்சு விடக்கூட பயமாக இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. காவேரி மருத்துவமனையின் வடபழனி கிளையை திறந்து வைத்து பேசிய அவர், “கடந்த 25 வருஷமாக நான் எந்தவொரு கல்லூரி, கட்டட திறப்பு விழாக்களிலும் பங்கேற்பதில்லை. நான் விழாக்களில் கலந்துகொண்டால், அதில் எனக்கும் பங்கு இருப்பதாக வதந்தி கிளப்பி விடுவார்கள்” என்றார்.

Similar News

News December 16, 2025

பொங்கல் பரிசு பணம்.. வெளியான முக்கிய தகவல்

image

2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம்(₹3,000-5,000 வரை) வழங்க, TN அரசு ஆயத்தமாகி வருவதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச்செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறு, நிதி ஆதாரங்களை சேகரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாம். பொங்கல் பரிசு குறித்து ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

News December 16, 2025

கட்டைவிரல் டூ கால் வரை.. ₹1,000 கோடிக்கு இன்சூரன்ஸ்!

image

சாதாரண மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸை அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை போட்டு வைப்பார்கள். ஆனால், விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான உடல் பாகங்களை கோடிகளில் இன்சூர் செய்து வைக்கின்றனர். அப்படி உலகில் அதிக விலைக்கு இன்சூரன்ஸ் பாலிசி வைத்துள்ள வீரர்களின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். யார் முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும்.

News December 16, 2025

புதிய நிபந்தனைகளால் தவெக அப்செட்!

image

ஈரோடு, விஜயமங்கலம் அருகே விஜய் பங்கேற்க உள்ள பரப்புரை கூட்டத்தில் மேற்கூரை கட்டாயம் என காவல்துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. மேலும், விஜய் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்த வழியில் வருகிறார் உள்ளிட்ட விவரங்களை முன்பே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசார இடத்தில் ஏற்கெனவே 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், புதிய நிபந்தனைகளால் அவ்விடத்தில் மாற்றங்கள் செய்ய தவெக தயாராகி வருகிறது.

error: Content is protected !!