News November 14, 2024

மொபைலுடன் பாத்ரூம் போகும் பழக்கம் உள்ளவரா…

image

பலருக்கும் பாத்ரூமில் மொபைலை பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. போன் கையில் இருந்தால், அரைமணி வரை அங்கேயே செலவிடுகிறார்கள். அப்படி இருப்பவர்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பது இடுப்புப் பகுதியில் அழுத்தத்தை உண்டாக்குமாம். இது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது எனவும் இது Pelvic சதைகளை வலுவிழக்கச் செய்யும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Similar News

News August 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 424 ▶குறள்: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

News August 11, 2025

இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்: நிதின் கட்கரி

image

அமெரிக்கா வளர்ந்த நாடு என்பதால் வரி என்ற பெயரில் மற்ற நாடுகளை மிரட்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியா இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் எனவும், நாம் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வளர்ந்த நாடாக மாறினால் நாம் யாரையும் மிரட்டமாட்டோம், ஏனெனில் அதையே நமது கலாச்சாரம் கற்றுக் கொடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

கோலி, ரோகித் ஓய்வு பெற அழுத்தம்?

image

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்குப்பின் கோலி, ரோகித் ஓய்வு பெற BCCI அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. 2027 ODI WC-ன் போது கோலிக்கு 39, ரோகித்துக்கு 40 வயதாகியிருக்கும் என்பதால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை BCCI மறுத்துள்ளது. ஓய்வு தொடர்பாக ஏதேனும் ஐடியா இருந்திருந்தால் அவர்களே தெரிவித்து இருப்பார்கள் என BCCI மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!