News November 14, 2024

கைமாறுகிறதா மணப்புரம் ஃபைனான்ஸ்?

image

மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற அமெரிக்க நிறுவனமான BainCapital திட்டமிட்டுள்ளது. மணப்புரம் நிறுவனம் நகைக்கடன் வழங்குவதை தொழிலாகக் கொண்டுள்ளது. இதன் துணை நிறுவனமான ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் அதிக வட்டிக்கு கடன்கள் வழங்கியதால் புதிய கடன்கள் வழங்க RBI தடை விதித்தது. இதனால் மணப்புரம் பங்குகளின் விலை சரியும் சூழலில், மெஜாரிட்டி பங்குகளை கைப்பற்ற BainCapital பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Similar News

News August 10, 2025

நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது: ஜெலன்ஸ்கி

image

போர் நிறுத்தத்திற்காக தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தங்கள் மக்களுக்கு கவுரவமான சமாதானம் வேண்டும், உக்ரைன் இல்லாமல் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் புடினை சந்தித்து பேச உள்ள நிலையில், நிலப்பகுதி பரிமாற்றங்கள் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.

News August 10, 2025

கிங்ஸ்லி குழந்தையின் பெயர் சூட்டுவிழா கிளிக்ஸ்

image

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை தம்பதி பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை சங்கீதா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். குழந்தைக்கு ஆட்லின் விக்டோரியா எனப் பெயரிட்டுள்ளனர். தற்போது பிஸியாக நடித்து வரும் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

News August 10, 2025

நீதியில் கர்நாடகா, சிறையில் தமிழ்நாடு

image

நாட்டில் நீதி வழங்குவதில் கர்நாடகமும், சிறைத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகமும் முதலிடத்தை பிடித்துள்ளன. 18 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. நீதி, காவல், சிறை, சட்ட சேவைகள் ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, மனிதவளம், வேலை பளு, கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!