News November 13, 2024

இரவு ரோந்து காவலர்கள் விபரம் வெளியீடு

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இரவு நேர பொதுமக்களின் உதவிக்காக ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் விபரம் அடங்கிய அட்டவணை தினம்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (நவம்பர் 13) காவலர்களின் பெயர், அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணை வெளியிட்டு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News August 22, 2025

நெல்லை: வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து

image

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் அறை நெல்லை ரயில் நிலையம் அருகே உள்ள பாலபாக்கிய நகர் பகுதியில் உள்ளது. அங்கு சமையலறை பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொதிக்கும் எண்ணெய் சட்டி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News August 22, 2025

நெல்லை: ரூ.1,31,500 சம்பளத்தில் வேலை APPLY NOW

image

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <>லிங்க்<<>> விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.35,900 – ரூ.1,31,500 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

News August 22, 2025

நெல்லையப்பர் ஆவணி மூலத் திருவிழா தொடக்கம்

image

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.

error: Content is protected !!