News November 13, 2024

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் 

image

IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (BC) மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Similar News

News November 19, 2024

தேனியில் 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் –  ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் நவ.1 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தற்போது 130 கிராம ஊராட்சிகளில் வருகின்ற நவ.23ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

தேனி: பெண்கள் சுயதொழில் துவங்க 50,000 மானியம்

image

தேனி மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் https://theni.nic.in என்ற இணையதளம் மூலம் டிச.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News November 19, 2024

ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு

image

தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*