News November 13, 2024
உஷார்: இதை செய்தால் பணம் போய் விடும்

செல்போன் பயனாளர்களுக்கு கஸ்டமர் கேரில் இருந்து பேசுவதாக வரும் போலி அழைப்புகளில் பேசும் நபர்கள், நூதன முறையில் வங்கிப் பணத்தை திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கஸ்டமர் கேர் ஊழியர்கள், தாங்கள் அனுப்பும் பைலில் இருக்கும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறி, பிறகு ஓடிபி உள்ளிட்டவற்றை அறிந்து திருடுவதாக கூறப்படுகிறது. எனவே உஷாராக இருந்தால் நமது பணம் திருடு போகாமல் காக்கலாம். SHARE IT
Similar News
News August 26, 2025
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்

இந்தியா ஒரு போதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகிற்கு தெரியும் எனவும், ஆனால் ஆபத்து வரும்போது சரியான பதிலடியை எப்படி கொடுப்பது என்பது நமக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
₹100, ₹200 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 75% ஏடிஎம்களில் ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு RBI ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. ஆனால், பல ஏடிஎம்களில் ₹500 நோட்டுகள் மட்டுமே இன்னும் கிடைப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஏடிஎம் மெஷினில் பணம் வைக்கும் காசெட்களை சீரமைத்து ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இனி சில்லரை பிரச்னை இருக்காது!
News August 26, 2025
Parenting: சரியான Day Care-ஐ தேர்ந்தெடுப்பது எப்படி?

உங்கள் செல்லப்பிள்ளையை Day Care-ல் சேர்க்கப்போகிறீர்களா? எப்படி சரியான Day Care-ஐ தேர்வு செய்வது என குழப்பமா? இந்த விஷயங்களை கவனித்தாலே போதும். ▶அரசு அனுமதி பெற்ற Day Care-ல் சேருங்கள் ▶அங்குள்ள பணியாளர்கள் மற்ற குழந்தைகளிடம் எப்படி இருக்கிறார்கள் என கவனியுங்கள் ▶Day Care-ல் சிசிடிவி கேமரா இருக்கிறதா என பாருங்கள் ▶வாரத்திற்கு ஒருமுறை பெற்றோருடன் மீட்டிங் நடத்தப்படுமா என கேளுங்கள்.