News November 13, 2024
மாடு உதைத்ததில் வாலிபர் உயிரிழப்பு

அரக்கோணம் அடுத்த கீழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி கடந்த 10ம் தேதி தனது பசுமாட்டில் பால் கறந்த போது மாடு உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டை: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள உள்ளுர் வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
News August 25, 2025
ராணிப்பேட்டையில் மின்தடை அறிவிப்பு

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.25) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை, பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News August 25, 2025
நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க!

சோளிங்கர் நகராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீழ்கண்டை மேட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நாளை (ஆக.26) காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 48 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.