News November 13, 2024
துப்பாக்கி கேட்கும் அரசு டாக்டர்கள்..!

கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து அங்குள்ள டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) துப்பாக்கி வழங்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தினர்.
Similar News
News August 14, 2025
விண்ணை முட்டும் விமான கட்டணங்கள்

தொடர் விடுமுறைகள் வந்தால் போதும் பஸ், விமானக் கட்டணங்களை நிறுவனங்கள் உயர்த்தி விடுகின்றன. இன்று ஆம்னி <<17398729>>பஸ் கட்டணம்<<>> பலமடங்கு உயர்ந்த நிலையில், விமான டிக்கெட்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரைக்கு தற்போது கட்டணம் ₹16,769 ஆக (வழக்கமாக ₹4,000) உயர்ந்துள்ளது. அதேபோல், தூத்துக்குடிக்கு ₹21,867 (₹3,843), திருச்சிக்கு ₹14,518 (₹1,827), கோவைக்கு ₹15,546 (₹3,818) கட்டணம் உயர்ந்துள்ளது.
News August 14, 2025
தூய்மை பணியாளர்களுக்கு ₹3.5 லட்சம் கடன்: தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், CM தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு, பணியின்போது இறந்தால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம், குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவி, தொழில் தொடங்க ₹3.5 லட்சம் கடன் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
News August 14, 2025
J&K வழக்கு: பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய SC

ஜம்மு & காஷ்மீருக்கான (J&K) சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு 2019-ல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான இன்றைய விசாரணையின்போது, 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய கோர்ட், J&K-யின் நிலையை கவனிக்காமல் விட்டுவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.