News November 13, 2024
திமுக ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது- அன்புமணி
திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். டாக்டர் மீதான தாக்குதல் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்படுவது டாக்டர்கள் தான் என்றார். மேலும், மருத்துவம் அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும், டாக்டர்கள் மீதான தாக்குதலை அரசு வேடிக்கை பார்க்க கூடாது என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2024
மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர் நியமனம்
கடலூர் தெற்கு மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பி.பி. கே சித்தார்த்தன் அவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளராக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அவரின் பணி சிறக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்தி வணங்கினார்கள்.
News November 19, 2024
விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், ஹரிகிருஷ்ணன், எஸ்.வேல்மாறன், ஏ.நாகராஜன், ஆர்.தாண்டவராயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News November 19, 2024
எல்லை பிரிப்பதில் பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் உள்ள அரியலுார் திருக்கை மற்றும் டட் நகர் ஊராட்சிகளின் எல்லை பிரிப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரியலுார் திருக்கை மக்களின் கருத்தை கேட்காமல், பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ.அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.