News March 20, 2024
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி – பிரேமலதா ஆகியோர் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் பிரேமலதா, நினைத்ததை சாதித்ததாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 17, 2025
விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.

டிஜிட்டல் அரெஸ்ட்.. ₹31.8 கோடி அபேஸ்

பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் சிக்கி ₹31.8 கோடியை இழந்துள்ளார். பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு கொரியர் வந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் ஒரு அழைப்பு வந்துள்ளது. பின்னர், தொடர்பில் வந்த குற்றவாளிகள், அவரை, தொடர்ந்து 6 மாத காலம் மிரட்டி, கொஞ்சம், கொஞ்சமாக பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பெண் புகார் அளித்த பின்னரே, மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.