News November 13, 2024
புதுவை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டான்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் வாயிலாக வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை வருகிற முப்பதாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
புதுவை: 500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்!

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தேவையான முட்டை, கொண்டைக்கடலை, சத்துமாவு வழங்கப்படுகிறது. புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
ஏழை மாணவனுக்கு உதவி கரம் நீட்டிய ஆட்சியர்

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவன் ராஜகுரு இவருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், தனது வறுமையால் படிக்க முடியாமல் தவித்து வந்தார். இவருடைய நிலைமையை அறிந்த மாவட்ட ஆட்சியர் குலோதுங்கன் இன்று மாணவனின் வீட்டுக்கு சென்று மாணவனுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி உதவி கரம் நீட்டி நெகழ்ச்சியை ஏற்படுத்தினார்.
News September 13, 2025
காரைக்கால்: சாலையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோட்டுச்சேரி கொம்பன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வரிச்சிக்குடி காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் அவர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா இன்று (13.9.2025) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.