News March 20, 2024
விருதுநகர் தேமுதிக-வுக்கு ஒதுக்கீடு..!

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News April 7, 2025
ஸ்ரீவி ஆண்டாள் ,ரெங்கமன்னார் நான்காம் நாள் இரவு புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 4-ம் திருநாளான நேற்று இரவு ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
News April 7, 2025
டூவிலர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி(39), மாரீஸ்வரி(39), இரவது மகள் முத்துமாரி(21), மீனாட்சி(14) உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மீசலூர் அருகே நடந்து சென்ற போது சரவணக்குமார்(25) என்பவர் ஓட்டிவந்த டூவிலர் இவர்கள் மீது மோதியது. இதில் 5 பேரும் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமுதவள்ளி, சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
News April 6, 2025
முன்னோர்கள் சாபம் தீர்க்கும் பூமிநாதர் கோயில்

திருச்சுழி பகுதியில் உள்ள பாண்டியர் காலத்துப் பூமிநாதர் கோயில், முன்னோர்களின் சாபம் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. இதை மையப்படுத்தி திருச்சுழியை சுற்றி 8 இடங்களில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள மூலவர் கல்யாண கோலத்தில் உள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு மோட்ச தீபம் ஏற்றினால் முன்னோர்கள் சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. SHARE பண்ணுங்க.