News November 13, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 25, 2025
ரொம்ப நேரம் Scroll பண்ணி, Shorts பாத்துட்டே இருக்கீங்களா..

பல மணி நேரம் Shorts வீடியோக்களை பார்ப்பது, மூளைக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என சீனாவின் Tianjin Normal University கண்டறிந்துள்ளது. இது போன்ற வீடியோக்கள் பார்க்கும்போது அதிகமாக டோபமைன் சுரப்பதால், போதைக்கு அடிமையாவதற்கு இணையான ஒரு நிலையை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், செய்யும் வேலையில் கவனம் குறைவது, ஞாபக சக்தி பிரச்னை போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
News August 25, 2025
சற்றுமுன்: விடுமுறை.. நாளை முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தம், வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக, ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(ஆக.26) தொடங்கி 31-ம் தேதி வரை சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் TNSTC செயலி, www.tnstc இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT.
News August 25, 2025
‘நீங்கா நினைவில் வாழும் அண்ணன்’.. விஜய் வாழ்த்து

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூர்ந்து திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் பற்றி தவெக தலைவர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நீங்கா நினைவில் வாழும் அண்ணன், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.