News November 13, 2024
EX MLA மறைவிற்கு முதல்வர் இரங்கல்

திமுக முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். மேலும், கோதண்டம் திறம்பட மக்கள் பணி ஆற்றியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த கோதண்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை MLA-ஆக தேர்வானவர்.
Similar News
News August 25, 2025
ஆம்புலன்ஸ் தாக்குதலுக்கு EPS தான் காரணம்: எழிலன்

இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
முதல்வரை கத்தியால் குத்த திட்டம்!

டெல்லி CM <<17460200>>ரேகா குப்தாவை<<>> அறைந்த ராஜேஷ் சகாரியா, விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார். CM ரேகா குப்தாவை கத்தியால் குத்த திட்டமிட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக கத்தியை வீசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தெருநாய்களை அகற்றுவதற்கு எதிரான தனது கோரிக்கையை CM ரேகா குப்தா நிராகரித்ததன் காரணமாகவே தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
BREAKING: தேதியை அறிவித்தார் பிரேமலதா

கடலூரில் (வேப்பூர் அருகில்) ஜனவரி 9-ம் தேதி தேமுதிக ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O’ நடைபெறும் என்று விஜயகாந்த் பிறந்தநாளான இன்று பிரேமலதா அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி, தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.