News November 13, 2024

அழகுப்படுத்துமா குஷ்புவின் கேரட் தேங்காய் எண்ணெய்..?

image

கேரட் – தேங்காய் எண்ணெய் கலவை முகத்தை அழகுப்படுத்தும் என குஷ்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த சருமநல மருத்துவர் பூர்ணிமா, கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதாலும், தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கும் என்பதாலும், குஷ்பு அவ்வாறு கூறியிருப்பார். ஆனால், அதுமட்டுமே சரும அழகை அதிகரித்துவிடாது. உணவு, வாழ்க்கை முறை அடிப்படையிலேயே சருமநலன் அமையும் என விளக்கமளித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

பெண்கள் நிலம் வாங்க ₹5 லட்சம் மானியம்..!

image

ஆதி திராவிடர், பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க தமிழக அரசு ₹5 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. *ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *விவசாய தொழில் செய்பவராக இருக்க வேண்டும். *தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்கக் கூடாது. *விண்ணப்பதாரர் நிலமற்றவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள மகளிர், www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News August 25, 2025

நாளை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

image

ஒருபுறம் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் எனவும், மறுபுறம் பல மாவட்டங்களில் வெப்பநிலை 2- 3 செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் இன்றே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால், நாளை முதல் காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.

News August 25, 2025

குழந்தை School-க்கு போக பயப்படுதா? இத செய்யுங்க

image

பள்ளியில் சேர்த்து பல மாதங்கள் ஆகியும் School-க்கு செல்லமாட்டேன் என குழந்தை அடம்பிடித்தால், அவர்களை அடிக்காமல் அவர்களிடம் சில விஷயங்கள் குறித்து பெற்றோர்கள் மனம் திறந்து பேசவேண்டும். ▶பள்ளியில் ஒதுக்கப்படுகிறார்களா என்பது பற்றி பேசுங்கள் ▶பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என கேளுங்கள் ▶ஆசிரியர்கள் அடிக்கிறார்களா என விசாரியுங்கள். SHARE.

error: Content is protected !!