News November 13, 2024
ஜார்க்கண்ட் தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்

ஜார்க்கண்ட்டில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு 43 தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 37 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 2ஆம் கட்ட தேர்தல் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
Similar News
News August 25, 2025
பெண்கள் நிலம் வாங்க ₹5 லட்சம் மானியம்..!

ஆதி திராவிடர், பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க தமிழக அரசு ₹5 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. *ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *விவசாய தொழில் செய்பவராக இருக்க வேண்டும். *தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்கக் கூடாது. *விண்ணப்பதாரர் நிலமற்றவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள மகளிர், www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
News August 25, 2025
நாளை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

ஒருபுறம் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் எனவும், மறுபுறம் பல மாவட்டங்களில் வெப்பநிலை 2- 3 செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் இன்றே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால், நாளை முதல் காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
News August 25, 2025
குழந்தை School-க்கு போக பயப்படுதா? இத செய்யுங்க

பள்ளியில் சேர்த்து பல மாதங்கள் ஆகியும் School-க்கு செல்லமாட்டேன் என குழந்தை அடம்பிடித்தால், அவர்களை அடிக்காமல் அவர்களிடம் சில விஷயங்கள் குறித்து பெற்றோர்கள் மனம் திறந்து பேசவேண்டும். ▶பள்ளியில் ஒதுக்கப்படுகிறார்களா என்பது பற்றி பேசுங்கள் ▶பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என கேளுங்கள் ▶ஆசிரியர்கள் அடிக்கிறார்களா என விசாரியுங்கள். SHARE.