News March 20, 2024
வேலூர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்

மக்களவைத் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் இன்று (மார்ச் 20) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 30, 2025
வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் நவம்பர் மாதத்திற்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கும் வகையில், நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
வேலூர்: மாவட்ட கண்காணிப்பாளர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு (01.01.2025) முதல் (28.10.2025) வரை குட்கா விற்பனை தொடர்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 27 இரு சக்கர மற்றும் 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
வேலூரில் இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்கள் இனி தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை ஆன்லைனிலே தெரிந்துகொள்ளலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு<


