News March 20, 2024
தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு அம்மை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல், வேர்க்குரு, நீர் கட்டி, கொப்பளங்கள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோய்களில் தர்கார்த்துக் கொள்ள, தண்ணீர், இளநீர், மோர், திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Similar News
News July 8, 2025
இருட்டிலும் இக்கட்டிலும் உள்ளது இபிஎஸ்தான்: துரைமுருகன்

இருட்டிலும் இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது இபிஎஸ்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, இருளை அகற்றி தமிழகத்தில் ஒளி வீசச் செய்வதே தன்னுடைய தீராத ஆசை என்ற இபிஎஸ்-ன் கருத்துக்கே இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் பிரசாரப் பயணத்தின்போது திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
News July 8, 2025
மசூத் அசாரை ஒப்படைக்க தயார்: பாக்., Ex அமைச்சர்

ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை நாடு கடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாக்., முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். விரிவான பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்றும், ஆனால் இதற்காக சரியான ஆதாரங்களை சமர்ப்பிப்பதும், எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க சாட்சியம் அளிக்க இந்தியாவில் இருந்து நபர்கள் வருவதும் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.
News July 8, 2025
யஷ் தயாள் மீது பரபரப்பு FIR!

RCB வீரர் யஷ் தயாள் மீது உ.பி.யில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது இந்த FIR பதியப்பட்டுள்ளது. யஷ் தயாள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் குறை தீர்க்கும் போர்டல் மூலம் இளம் பெண் ஒருவர் அவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வைத்துள்ளார்.