News November 12, 2024
பள்ளி மாணவர்களுக்கு தேனி கலெக்டர் அறிவிப்பு

“தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நவம்பர் 17ஆம் தேதி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது” என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல் இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
தேனி; G.H-ல் வேலை ரெடி! 8th தகுதி.. APPLY NOW

தேனி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஆண்டிபட்டி , கம்பம் , போடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8th முதல் D.Pharm, நர்சிங் படித்தவர்கள் இப்பணிகளுக்கு 24.11.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: ரூ.8,950 – ரூ.60,000. <
News November 11, 2025
தேனி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கம்பம் பகுதியில் தற்போது முதல் போக நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 2.ம் போகத்திற்கு என்.எல்.ஆர். என்ற ரகம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போதும் விவசாயிகள் அந்த ரகத்தை விரும்புகின்றனர். எனவே, என்.எல்.ஆர். மற்றும் ஆடுதுறை 54, கோ 55 ரக விதை நெல் 33 டன் வரை இருப்பு உள்ளது. விரும்பும் விவசாயிகள் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
News November 10, 2025
தேனி: டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (75). இவர் நேற்று (நவ.9) அவரது பேரனின் பைக்கில் பின்னால் அமர்ந்து பெரியகுளம் சாலையில் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த காளியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


