News March 20, 2024

புதுச்சேரியில் பொறுப்பு கவர்னர் நியமனம்

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய கவர்னர் பொறுப்புக்களை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கவர்னர் நியமிக்கபடும் வரை அவர் இந்த பொறுப்புக்களை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வருகின்ற வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார். 

Similar News

News October 30, 2025

புதுச்சேரி: மின் தடை அறிவிப்பு

image

புதுச்சேரி, நாளை (31.10.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெடுங்காடு மின் பிரிவிற்குட்பட்ட உயர் மின் அழுத்த பாதையில், சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செருமாவிலங்கை பத்தக்குடி, தேவமாபுரம், காமராஜர் சாலை, கீழபருத்திகுடி, அம்பேத்கார் நகர் வரை உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்துறை உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

புதுச்சேரி: உதவி எண்கள் அறிவிப்பு!

image

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வில்லியனூர் சார்பாக உதவி எண்கள் அறிவித்தனர், அவை குழந்தைகள் பாதுகாப்பு சேவை 1098, பெண்கள் பாதுகாப்பு 1091, மகளிர் குற்ற தடுப்பு உதவி மையம் 181, இயற்கை பேரிடர் மீட்பு சேவை 1096, சைபர் குற்றங்களுக்கு புகார் எண் 1930, சமூக நலத்துறை உதவி எண் 04132244964 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News October 30, 2025

புதுகை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!