News November 12, 2024
ஆங்கிலம் அறிவோம்: Escalator Vs Elevator

Escalator என்பதும், Elevator என்பதும் அடிப்படையில் இயந்திரத்தையே குறிக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. Elevator என்பதை நாம் பொதுவாக லிஃப்ட் என்று குறிப்பிடுகிறோம். தமிழில் அதை மின்தூக்கி எனலாம். Escalator என்பது நகரும் படிக்கட்டுகளைக் கொண்டது. படிகள் சென்சாரில் தொடர்ந்து ஏறிக்கொண்டோ, இறங்கிக்கொண்டோ இருக்கும். Escalator என்பதை நகரும் படி எனலாம். இரண்டையும் நாம் பயன்படுத்த முடியும்.
Similar News
News August 25, 2025
கடவுள் ராமன் குறித்து வன்னி அரசு சர்ச்சை பேச்சு

இந்து கடவுள் ராமன் பற்றிய விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. ராமனும், ராமதாஸும் வேறு வேறல்ல, கருத்தியல் ரீதியாக இருவரும் ஒன்றே; பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன், பார்ப்பன கொள்கைகளுக்காக படுகொலை செய்ய தூண்டுபவர் ராமதாஸ் என சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும், தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
விநாயகர் சதுர்த்தி இனி மாநில விழா.. MH அரசு அறிவிப்பு

ஆக.27-ல் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு மாநில விழா அந்தஸ்தை மகாராஷ்டிர அரசு வழங்கியுள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். உங்கள் ஊரில் விநாயகர் சதுர்த்தி விழாக்கோலாம் பூண்டுவிட்டதா?
News August 25, 2025
சற்றுமுன்: தங்கம் விலை குறைந்தது

கடந்த வார இறுதியில் கிடுகிடுவென்று அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹74,440-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,305-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹131-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.