News November 12, 2024
‘கங்குவா’ ரிலீசாவதில் சிக்கல்

Fuel Technologies நிறுவனத்திற்கு தர வேண்டிய ₹1.60 கோடியை, ஐகோர்ட் பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3 படங்களின் இந்தி உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ₹6.60 கோடிக்கு மேற்கூறிய நிறுவனம் வாங்கியது. இதில் 2 படங்கள் தயாரிக்கப்படாததால், ஸ்டூடியோ க்ரீன் ₹5 கோடியை திருப்பி தந்தது. மீதமுள்ள தொகையை கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
Similar News
News August 14, 2025
ராசி பலன்கள் (14.08.2025)

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – எதிர்ப்பு ➤ மிதுனம் – உயர்வு ➤ கடகம் – ஏமாற்றம் ➤ சிம்மம் – புகழ் ➤ கன்னி – ஊக்கம் ➤ துலாம் – உதவி ➤ விருச்சிகம் – மறதி ➤ தனுசு – அசதி ➤ மகரம் – பெருமை ➤ கும்பம் – ஆக்கம் ➤ மீனம் – போட்டி.
News August 14, 2025
பெண்களே இந்த 7 விஷயத்தை அவசியம் பண்ணுங்க..!

▶அதிக நேரம் உட்கார வேண்டாம். ▶எலும்பு ஆரோக்கியத்திற்கு கீரை அவசியம். ▶உடல் எடைக்கு ஏற்ப கலோரிகளில் கவனம் செலுத்தி சாப்பிடுங்கள். ▶ஹார்மோன் பிரச்னைகளை தவிர்க்க சரியான டயட், உறக்கம், உடற்பயிற்சி அவசியம். ▶குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்துங்கள். ▶வருடத்திற்கு ஒருமுறை தோல் நிபுணரையும், மகப்பேறு மருத்துவரையும் அணுகுங்கள் ▶40 வயதை தொட்டவர்கள் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யவேண்டும்.
News August 14, 2025
நாளை வலுவடையும் காற்றழுத்தம்.. கவனமா இருங்க!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுவடையும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செ.பட்டு, தென்காசி, காஞ்சி, திருவள்ளூர், நெல்லை, கோவை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை நீடிக்குமாம். அதனால், வெளியே செல்லும் போது குடையை மறக்க வேண்டாம். கவனமா இருங்க மக்களே..!