News November 12, 2024

தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பொறுப்பேற்பு

image

தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 1974ஆம் ஆண்டு பிறந்தார். 2002ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தமிழகத்தில் பணியாற்றி வந்தார். கடைசியாக சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளராக பணியாற்றிய அவர், தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி என்ற முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

Similar News

News August 14, 2025

விருதுநகர் மக்களே… இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 14, 2025

Coolie Review: லோகேஷ் – ரஜினி காம்போ ஒர்க் அவுட் ஆனதா?

image

ஆமிர்கான் கேமியோ உள்பட பல கேரக்டர்கள் இருந்தாலும், ஒற்றை ஆளாக ‘கூலி’யை சுமக்கிறார் ரஜினி. செளபின் ரோல் மனதில் நிற்கிறது. ரஜினியின் சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சி அபாரம். விண்டேஜ் லுக்கும் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது. அனிருத்தின் மியூசிக் பக்கபலம். ஆனால், மற்ற கேரக்டர்களுக்கான அழுத்தம் குறைவாக உள்ளதால், ஆக்‌ஷன் படத்தில் வேகம் இல்லை. ரேட்டிங்: 2.5/5. உங்க ரேட்டிங் என்ன?

News August 14, 2025

மதியம் 12 மணி வரை.. முக்கியச் செய்திகள்

image

*CM <<17400700>>ஸ்டாலின்<<>> தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.
*நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் கைது: <<17399560>>அரசியல்<<>> கட்சிகள் கண்டனம்.
*ஹிமாச்சலில் மீண்டும் <<17387462>>மேகவெடிப்பால்<<>> பெருவெள்ளம்.
*பாக்.,கின் பயங்கரவாத எதிர்ப்பு பாராட்டுக்குரியது: USA.
*மாறாத <<17399590>>தங்கம்<<>> விலை. *உலகம் முழுவதும் வெளியானது ‘<<17398550>>கூலி<<>>’. *3 வீரர்களை கொடுக்க <<17400416>>CSK<<>> மறுப்பு.

error: Content is protected !!