News November 12, 2024

கள்ளக்குறிச்சி மக்கள் கவனத்திற்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் தங்கள் வீடு, கடை, ஹோட்டல்களில் வயரிங் செய்யும்போது தரமான பொருட்களைப் பயன்படுத்தி, முறையான மின் இணைப்பு கொடுத்து வயரிங் செய்ய வேண்டும். ஈரமான பகுதிகளில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது. இடிமின்னல் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என  தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (10.09.2025)
நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 10, 2025

குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் மாதாந்திர ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (10.09.2025) நடைபெற்றது.இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு செய்தார்

News September 10, 2025

கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!