News November 12, 2024
நெல்லையின் முதல் பெண் கலெக்டருக்கு முக்கிய பொறுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் பெண் கலெக்டராக சிறப்பாக பணியாற்றி மக்களின் ஆதரவு பெற்றவர் ஷில்பா பிரபாகர் சதீஷ். இவர் தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு நேற்று தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய துறை பொறுப்பேற்க இருக்கும் அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
நெல்லை: வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் அறை நெல்லை ரயில் நிலையம் அருகே உள்ள பாலபாக்கிய நகர் பகுதியில் உள்ளது. அங்கு சமையலறை பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொதிக்கும் எண்ணெய் சட்டி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News August 22, 2025
நெல்லை: ரூ.1,31,500 சம்பளத்தில் வேலை APPLY NOW

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <
News August 22, 2025
நெல்லையப்பர் ஆவணி மூலத் திருவிழா தொடக்கம்

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.