News November 12, 2024
செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன் காரணமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 8, 2025
செங்கல்பட்டின் ஆன்மீக ட்ரெக்கிங் ஸ்பாட்

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே உள்ளது குபேரகிரி மலை. மலைக்கு மேலே மகாகாளிங்கராய ஈஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் சிறிய சிவலிங்கம் மட்டும் உள்ள நிலையில், மலையின் உச்சியில் இருந்து அழகான காட்சியுடன் ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம் தரும் கோயிலாக இது உள்ளது. மக்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். ட்ரெக்கிங் போக நல்ல இடம். மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
கரும்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 2025-26 பருவத்தில் கரும்பு நடவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.7,450 மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு இந்த மானியம் வழங்கப்படும். 2024-25ம் ஆண்டு 937 விவசாயிகளுக்கு ரூ.2.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு நடவிற்கு முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.