News March 20, 2024

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘கார்த்தி 26’

image

கார்த்தி நடிக்கும் 26ஆவது படத்தின் OTT உரிமத்தை, அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு, ‘வா வாத்தியாரே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 22, 2025

இதனால் தான் டீமில் இடம் கிடைக்கலயா? காங்., கேள்வி

image

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் சர்ஃபராஸ் கான், இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் கம்பீரின் மத பாகுபாட்டை குறிப்பிட்ட காங்., செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, சர்ஃபராஸ் இஸ்லாமியர் என்பதால் தான் தேர்வு செய்யப்படவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக AIMIM கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசியும் கேள்வி எழுப்பியிருந்தார்.

News October 22, 2025

குரூப் 4 ரிசல்ட் பார்ப்பது எப்படி?

image

ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான <<18073242>>குரூப் 4<<>> தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்யவும். #SHARE IT

News October 22, 2025

BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் விலை, இன்று ₹3,680 குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் 1 சவரன் காலையில் ₹2,400 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,280 குறைந்துள்ளது. இதன்மூலம், 1 கிராம் ₹11,540-க்கும், 1 சவரன் ₹92,320-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரேநாளில் தங்கம் விலை பெரியளவில் குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!