News November 11, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ11) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளைதொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

குலசேகரன்பட்டினத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பிரபு பாஸ்கரன் என்பவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

முத்து நகர் பீச்சில் நாளை முதல் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி

image

சூரிய அஸ்தமனக் காட்சியை பிரமிக்க வைக்கும் மிக அழகிய கடற்கரை இடங்களில் ஒன்றான முத்து நகர் கடற்கரை வேடிக்கை, ஓய்வு, சாகசத்தின் சரியான தொகுப்பாக உள்ளது. இங்கு நாளை(செப்.12) முதல் செப்.14 வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கயாக், படகுபோட்டி, கடல்நீச்சல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. SHARE IT

News September 11, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!