News November 11, 2024

அன்று Constable மகன் : இன்று ₹80,00,00,000 சொத்துக்கு அதிபதி

image

IPL தொடர் பலரின் வாழ்க்கையை பெரிதளவில் மாற்றிவிடுகிறது. இவர் 2013ல் U-19 தொடரில் விளையாடி, கவனத்தை ஈர்த்தார். 2015’ல் இந்திய அணிக்காக விளையாட துவங்கியவர், தற்போது T20Iல் தொடர்ந்து 2 முறை சதம் விளாசிய வீரராக சாதனை படைத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி. காரணம், ராஜஸ்தான் அணி இவருக்கு IPL தொடரில் அளிக்கும் சம்பளம் தான். அவர் யாரென்றால் சஞ்சு சாம்சன் தான். Happy Birthday Sanju….

Similar News

News December 8, 2025

இரவில் சந்தித்தார் ஓபிஎஸ்.. மீண்டும் கூட்டணியா?

image

கோவையில் நேற்று இரவு அண்ணாமலை – OPS சந்தித்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர் மீட்புக்குழு நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும், சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால், NDA கூட்டணியில் மீண்டும் OPS இணைய வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.

News December 8, 2025

மீண்டும் எப்போது வருவார்கள் Ro-Ko?

image

ஆஸி., & SA அணியை துவம்சம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய Ro-Ko ஜோடி மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்கள் என்ற அட்டவணை வெளிவந்துள்ளது. ஜனவரியில் நியூசிலாந்து தொடர், ஜூனில் ஆப்கானிஸ்தான் தொடர், ஜூலையில் இங்கிலாந்து தொடர், செப்டம்பரில் வங்கதேச தொடர், செப்டம்பர் – அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் தொடர், அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்து தொடர் என 2026-ல் மட்டும் 6 சீரிஸில் Ro-Ko விளையாடவுள்ளனர்.

News December 8, 2025

வெறும் வயிற்றில் தேங்காய்: இவ்வளவு நன்மைகளா?

image

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 40-50 கிராம் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு பிரச்னைகள் வருவதில்லை. *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறது. *சரும பொலிவு, முடி வளர்ச்சிக்கு நல்லது * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதேசமயம் அதிகப்படியான தேங்காயும் சாப்பிடக்கூடாது.

error: Content is protected !!