News March 20, 2024
நடிகை உடல்நிலை … உதவி கேட்டும் கையேந்தும் சக நடிகை

அண்மையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ‘சைத்தான்’ பட நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருந்ததியின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டும் கோலிவுட்டில் இருந்து யாரும் உதவ முன்வரவில்லை என அருந்ததியின் தோழியும், மலையாள நடிகையுமான ரம்யா கண்ணீர் மல்க கூறியுள்ளார். அருந்ததிக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 16, 2025
அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் 3 ஹீரோயின்கள்?

அல்லு அர்ஜுனுடன் இணைந்து பிரம்மாண்டமான படத்தை இயக்கும் பணியை அட்லீ தொடங்கியுள்ளார். புஷ்பா – 2 வெற்றிக்கு பின் அல்லுவும், ஜவான் வெற்றிக்கு பின் அட்லீயும் இப்படத்தில் கூட்டணி அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஜான்வி கபூர், திஷா பதானி மற்றும் ஷரத்தா கபூர் ஆகியோருடன் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
News April 16, 2025
அவுரங்கசீப்பிற்காக ஐநாவை நாடிய முகலாய வாரிசு

இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷாவின் வழித்தோன்றல் எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுதீன், அவுரங்கசீப் கல்லறையை பாதுகாக்க கோரி ஐநாவை நாடியுள்ளார். ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோவிற்கு எழுதிய கடிதத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னத்தில் மாற்றம் செய்வது சர்வதேச விதிகளை மீறுவதாகும், எனவே கல்லறையை பாதுகாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி யாகூப் வலியுறுத்தியுள்ளார்.
News April 16, 2025
பணமழையில் நனையப் போகும் ராசிகள்

கிரகங்களின் இளவரசரான புதன், நேற்று மீன ராசிக்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசியில் ஏற்கெனவே சனியும், சுக்கிரனும் பயணித்து வருகிற காரணத்தால், சனி சுக்கிர புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இதனால், திரிகிரஹ யோகம் ஏற்பட்டு, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளுக்கு பணமழை பெய்யவுள்ளது. இவர்களுக்கு இருக்கும் நிதி நெருக்கடியும் தீரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.