News November 11, 2024

Maths Formula-வால் அளக்கப்பட்ட உலக அழகி இவரே

image

அழகை அளக்க முடியும் என்றால் நம்புவீர்களா? முடியும் என்கிறார் முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் ஜூலியன் டி சில்வா. அதற்காக Golden Ratio என்கிற பார்முலா உள்ளதாம். முகத்தின் அளவு -அமைப்பு, கண், மூக்கு, தாடை போன்றவற்றை அளந்து இந்த Golden Ratio அவர் கணக்கிடுகிறார். அதன்படி, தற்போது அதிகபட்சமாக 1.62 புள்ளிகளை பெற்று பிரிட்டன் நடிகையான ஜோடி கமர் என்பவர் தான் உலகின் அழகான பெண் என்றும் கூறுகிறார்கள்.

Similar News

News December 8, 2025

திருவள்ளூரில் உடல் நசுங்கி பலி!

image

திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி மேட்டுக் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்த சாமி(40), விவசாயியான இவர் நேற்று(டிச.7) காலை வயல்வெளியில் டிராக்டர் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இடுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 8, 2025

BREAKING: கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய பரிந்துரை

image

திமுக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய ED பரிந்துரை செய்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் ₹1,020 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நேரு மீது FIR பதிவு செய்து, விசாரனை நடத்த தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு 252 பக்க ஆவணங்களை ED அனுப்பியுள்ளது.

News December 8, 2025

ஹைதராபாத்தில் டொனால்ட் டிரம்ப் சாலை!

image

ஹைதராபாத்தில், USA துணை தூதரகம் அமைந்துள்ள உள்ள சாலைக்கு ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என பெயரிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமைவெளி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயர் சூட்டப்பட உள்ளது. ஏற்கெனவே சாலைகளுக்கு <<18292123>>கார்பரேட் நிறுவனங்களின்<<>> பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக CM ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தன் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!