News November 11, 2024
ராகுலை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை: காங்கிரஸ்

ஊழல் ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை மடைமாற்றும் விதமாக, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த மோடி முயல்வதாகவும் குற்றஞ்சாட்டிய செல்வப்பெருந்தகை, மக்களுக்காக தன்னை வருத்திக்கொண்டு 10,000 கிமீ நடந்த ராகுலை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை என்றார்.
Similar News
News December 8, 2025
Sports Roundup: F1 உலக சாம்பியன் ஆனார் நோரிஸ்

*அகமதாபாத்தில் நடந்த பெண்களுக்கான டி20 டிராபி காலிறுதியில் கர்நாடகாவிடம் தமிழகம் தோற்றது. *மேஜர் லீக் கால்பந்து 30-வது சீசனில், இண்டர் மயாமி முதல்முறையாக கோப்பையை வென்றது. *F1 கார்பந்தயத்தின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார். *கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் EX இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி.
News December 8, 2025
சிவன், விநாயகருக்கு உரிய நாள்: இன்று இப்படி வழிபட்டால்..

இன்று சிவனுக்கு உரிய திங்கள்கிழமையும், விநாயகருக்கு உரிய சதுர்த்தியும் ஒரே நாளில் வருவது அபூர்வமான ‘சோம சங்கடஹர சதுர்த்தி’ ஆகும்.. இன்று மாலை 6 மணிக்கு மேல் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுங்கள். சந்திர தரிசனம் செய்து, ‘ஓம் விக்ன ராஜாய நமஹ’ என்ற ஸ்லோகத்தை 108 முறை உச்சரியுங்கள். வாழ்வில் தீராத சங்கடங்கள், தடைகள் அனைத்தும் நீங்கும். முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நல்லதே நடக்கும்!
News December 8, 2025
Cinema Roundup: லோகேஷ் – அமீர்கான் படம் டிராப்பா?

*‘தேவதையை கண்டேன்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அறிவிப்பு. *‘திரிஷ்யம் 3’ படத்தின் தியேட்டர் மற்றும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகளை பென் ஸ்டுடியோஸ் மற்றும் பெனரோமா ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. *தன்னை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படம் டிராப் ஆகவில்லை என அமீர்கான் அறிவிப்பு. *பிக்பாஸ் இந்தி சீசன் 19 டைட்டில் வின்னரானார் இளம் நடிகர் கௌரவ் கண்ணா.


