News November 11, 2024

தவெகவில் ஒரே மாதத்தில் 75 லட்சம் பேர் ஐக்கியம்

image

தவெகவில் ஒரே மாதத்தில் 75 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்த விஜய், தற்போது புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக தனி இணையதள செயலி உருவாக்கப்பட்டு அதன்மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் பலர் விண்ணப்பிப்பதால், செயலி சிறிது நேரம் முடங்கியது. பின்னர் சரி செய்யப்பட்டு விண்ணப்பப்பதிவு மீண்டும் தொடங்கியது.

Similar News

News August 24, 2025

Parenting: உங்க குழந்தையின் ஃபோனை கண்காணிக்கணுமா?

image

ஃபோனில் அதிக நேரத்தை செலவிடும் உங்கள் குழந்தை, அதில் என்ன பார்க்கிறது என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் ஃபோனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும். Moniterro என்ற App மூலம் இதை நீங்கள் செய்யலாம். இந்த APP உங்கள் குழந்தையின் ஃபோனுக்கு வரும் Calls, SMS-ஐ கண்காணிப்பதோடு, அவர்கள் எவ்வளவு நேரம் ஃபோன் பார்க்க வேண்டும் என்பதையும் நிர்ணயிக்க உதவுகிறது. SHARE.

News August 24, 2025

‘கூலி’ படம் புதிய சாதனை.. இவ்வளவு கோடியா..!

image

கூலி படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. வட அமெரிக்காவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் ₹60 கோடி வசூலாகியுள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் இப்படம் ₹500 கோடி வரை கலெக்‌ஷனாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்துட்டீங்களா?

News August 24, 2025

1 பைசா செலவு இல்லாம 1 வருஷம் ஊர் சுத்தணுமா?

image

விசா, தங்கும் இடம், உணவு என ஒரு செலவும் இல்லாமல் 4 கண்டங்களை சுற்றி பார்க்கவேண்டுமா? 1 வருடத்திற்கான Free Travel ஸ்கீமை அறிமுகப்படுத்தியுள்ளது Scapia எனும் நிறுவனம். இதற்கு விண்ணப்பிக்க, பயணத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு வீடியோ தயாரித்து, அதனை <>scapia.cards/leapyear<<>> Website-ல் ஆக.31-க்குள் பதிவேற்ற வேண்டும். வெற்றிபெறும் 2 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!