News March 20, 2024
பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது

மத்திய அரசு முறையாக சோதனைகளைச் செய்திருந்தால், நாடு முழுவதும் இந்தளவுக்கு போதைப்பொருள்கள் நிச்சயம் பரவியிருக்காது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “10 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாத மோடி, இங்கு எத்தனை முறை வந்தாலும் எந்தப் பயனுமில்லை. பாஜகவின் பித்தலாட்டம் இங்கு எடுபடாது. இங்கே பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
நாளை துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை (Sep 9) நாடாளுமன்றத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். து.ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கல்லூரியில் ராஜ்யசபா MP-கள் 238 பேர், லோக்சபா MP-கள் 542 பேர் உள்பட மொத்தம் 781 MP-கள் வாக்களிப்பர். குறைந்தது 391 வாக்குகள் பெறுபவர் வெற்றிபெறுவார்.
News September 8, 2025
காக்கி சட்டையுடன் கைதான DSP! சட்டம் கடமையை செய்தது

வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய, காஞ்சி DSP சங்கர் கணேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த நீதிபதி, இவ்விவகாரத்தில் இன்று ஆஜராக வந்த அவரை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து, போலீஸ் சீருடையில் இருந்த அவர் நீதிமன்ற வளத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதன்பின், போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
News September 8, 2025
ஸ்டாலின் அப்பா! என்னை காப்பாத்துங்க!

Appa என்ற ஹேஷ்டேக்குடன் X-ல் மூலம் ஸ்டாலினிடம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். அதில், 7 மாத கர்ப்பிணியான நான், பார்வையற்ற தாயாருடன் நேரில் சென்று புகாரளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பா! உங்க அரசை என்னை போன்ற பெண்கள் நம்புகிறோம். இதில், நீங்கள் தலையிட்டு என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், எனக்கும் நீதி பெற்று தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.