News November 11, 2024

பொதுமக்களிடமிருந்து 450 புகார் மனுக்கள் பெறப்பட்டன – ஆட்சியர்\

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி கடன், குடும்ப அட்டை, பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 450 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.

Similar News

News December 7, 2025

தஞ்சாவூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 7, 2025

தஞ்சை: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

image

பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிக்காடு பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் டான்போஸ்கோ. இவர் திருச்சி சமயபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் சுடுதண்ணீர் வைத்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி டான்போஸ்கோ பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

தஞ்சை: முன்னாள் எம்பி வீட்டில் கொள்ளை – 4 பேர் கைது

image

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஒரே குடும்பத்தை சேர்ந்த சாதிக் பாஷா, மொய்தீன், ஆயிஷா பர்வீன், பாத்திமா ரசூல் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷாஜகான் என்பவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!