News November 11, 2024
இலங்கை மீது பொருளாதாரத் தடை: கொந்தளித்த சீமான்

இலங்கை விவகாரம் குறித்து சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், “தமிழக மீனவர்கள்தான் எல்லைத் தாண்டி போறாங்களா.. கேரள மீனவர்கள் போகவில்லையா? அப்போ கச்சத்தீவை எங்களுக்கு வாங்கிக் கொடு. ஒரு சின்ன நாடு இவ்ளோ செய்யுது. அதன் மீது ஒரு பொருளாதாரத் தடை என ஏதாவது நெருக்கடி கொடுக்கணுமா இல்லையா? அப்போ தானே அது நம் கட்டுக்குள் வரும். ஆனால் இந்தியாவோ, இலங்கையோட ஒட்டி உறவாடுது” என சாடினார்.
Similar News
News August 5, 2025
WOW! காலையில் உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி

காலையில் சீக்கிரமாக எழுபவர்களின் உற்பத்தித் திறனும் ஆற்றலும் அதிகமாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஆரோக்கியத்துடன் அதிக மகிழ்ச்சியாக, நாள் முழுதும் ஆற்றலுடன் இருப்பதுடன், இவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆனால், தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுபவர்களுக்கு மனச்சோர்வுடன், சில மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நீங்கள் எப்படி?
News August 5, 2025
டேல் ஸ்டெயின் கேட்டதை கொடுத்த சிராஜ்

கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுப்பார் என டேல் ஸ்டெயின் கணித்திருந்தார். 5-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டை மட்டுமே சிராஜ் எடுத்தார். ஆனால், 2-வது இன்னிங்சில் அசாத்தியமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். வெற்றிக்கு பின் நீங்கள் கேட்டதை கொடுத்துட்டேன் என டேல் ஸ்டெயினுக்கு, X பக்கத்தில் சிராஜ் பதில் அளித்துள்ளார்.
News August 5, 2025
அன்புமணிக்கு ஒன்னும் தெரியாது: துரைமுருகன் பதிலடி

‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பணம்’ மேற்கொண்டு வரும் அன்புமணி, அமைச்சர் துரைமுருகனை கடுமையாக சாடியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார் என துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.